மதுரை: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள் கைது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, சிவகாசியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவருடன் ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். பிப்ரவரி 6 அன்று, மாணவர் சிறுமியை பேரையூர் அணைக்கரைப்பட்டிக்கு அழைத்துச் சென்று தோட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அவரது உறவினர்களான சதீஷ் (22) மற்றும் கார்த்திக் (35) ஆகியோரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமி தப்பித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, கல்லூரி மாணவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி