உசிலம்பட்டி: பேரையூர், பெருங்குடி பகுதிகளில் தூரல் மழை

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்க இன்று (ஏப். 2) மாலை மதுரையின் சுற்றுவட்டார பகுதியில் நாகமலை புதுக்கோட்டை, உசிலம்பட்டி, பேரையூர், திருமங்கலம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தூறல் மழை சிறிது நேரம் பெய்தது. கனமழையை எதிர்பார்த்த மக்களுக்கு இந்த மழை ஏமாற்றத்தையே கொடுத்தது. இனிவரும் நாட்களில் கனமழையை மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி