மதுரை திருமங்கலம் அருகே சிந்துப்பட்டியை சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும் தங்க மாயன் ஆகியோருக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக நீண்டநாட்களாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (மே.19) இரவு இரு குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், தங்கமாயன் கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சத்தியமூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். போலீசார் தங்கமாயனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.