மதுரை மாவட்டம் பேரையூர் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று அதிகாலையில் புகுந்து ரகளையில் ஈடுபட்டு பரபரப்பை உண்டாக்கி தப்பிச் சென்ற பிரபாகரன் மற்றும் அய்யனார் ஆகிய இருவர் இன்று (ஜூன் 15) காலை விருதுநகர் அருகே கைது செய்யப்பட்டனர். இவர்களை போலீசார் கைது செய்யும் போது தப்பி ஓடிய பிரபாகரன் கீழே விழுந்ததில் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் இருவரிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.