திருமங்கலம் - சோழவந்தான் ரோட்டில் உள்ள வீரராகவன் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர் இளங்கோவன், பால் வியாபாரத்திற்கு சென்றபோது அவரது வீட்டிற்குள் புகுந்து பசுமாடுகளை திருட முயன்ற மர்ம நபர்கள் இருவரை அக்கம்பக்கத்தினர் மடக்கிப் பிடித்தனர். ஒருவர் தப்பியோட, பிடிபட்ட நபரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், இருவரும் மாடுகளை திருட வந்ததாகக் கூறினர். போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.