மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் நான்கு வழி சாலை இ.பி. காலனி பேருந்து நிறுத்தம் அருகே இன்று (ஜூன் 2) இரண்டு கார்கள் முன்னும் பின்னும் மோதியதில் இரண்டு கார்களும் சேதமடைந்தன. இதில் பயணம் செய்தவர்களுக்கு பெரிய காயங்கள் ஏதும் இல்லை. போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.