திருமங்கலம்: பலசரக்கு கடையில் திருட்டு.. போலீஸ் விசாரணை

மதுரை மாவட்டம் திருமங்கலம் கல்லுப்பட்டி ராம் நகரை சேர்ந்த ஜெய்சங்கர் (54) என்பவர் அதே ஊரில் மாரியம்மன் கோயில் எதிரே பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் (மார்ச். 14) இரவு கடையை பூட்டிவிட்டு நேற்று (மார்ச். 15) காலை மீண்டும் கடையை திறக்க வந்த போது, மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த 25 ஆயிரம் ரூபாயை திருடி சென்றிருப்பது தெரிந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி