திருமங்கலம்: பள்ளி வாசலில் மயங்கி விழுந்த மாணவிகள்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி அவரது தோழியான மாணவி இருவரும் இன்று (ஜூன் 16) காலை பள்ளிக்கு வருகை தந்த நிலையில் பள்ளி நுழைவு வாயில் அருகே அவர்கள் இருவரும் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். சக மாணவர்கள் உடனடியாக பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் அளித்து ஆசிரியர்கள் மயங்கி கிடந்த மாணவிகள் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிகள் இருவரும் அருகில் இருந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் என்றும் இதில் பத்தாம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்து விடுமுறை எடுப்பதாக வீட்டில் கூறியதால் அவரது பெற்றோர் திட்டி பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மனம் உடைந்த மாணவி ஊரிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் தனது தோழியான மற்ற மாணவியிடம் தான் விஷம் அருந்தி தற்கொலை செய்யப் போவதாக கூறி அதற்கு மற்ற மாணவி என் தோழியான நீயே சாக முடிவெடுத்ததால் நானும் உன்னோடு வந்து விடுகிறேன் என கூறி இருவரும் ஊரில் இருந்த பெட்டிக்கடையில் எறும்பு பொடி பாக்கெட்டை எடுத்து தண்ணீரில் கலந்து இருவரும் குடித்து விட்டு பேருந்தில் ஏறி பள்ளிக்கு வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி