திருமங்கலம்: குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் தாய் மரணம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஜவகர் நகர் 3வது தெருவை சேர்ந்த உமேஷ் குமார் (26) என்பவரது மனைவி நளினி (24) ஆகிய இருவரும் மதுரையில் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்துள்ளது. கர்ப்பிணியாக இருந்த நளினியை பெற்றோர் திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக நேற்று (ஜூன் 4) காலை சேர்த்தனர். 

பின்னர் மதியம் 1:30 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தாயிற்கு ரத்தப்போக்கு அதிகமானதால் மதியம் நளினியை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நளினி உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி