திருமங்கலம்: குழந்தையை கொன்று தாய் தற்கொலை

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே சிவரக்கோட்டையில், குடும்ப தகராறு காரணமாக தாய் கவிதா (27) தனது 3 வயது மகள் சஞ்சீதாவை 50 அடி ஆழ கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகராறு காரணமாக தாய் வீட்டில் இருந்த கவிதாவை கணவர் பார்க்க வரவில்லை என்ற மன வருத்தத்தில் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்களது 9 வயது மகன் சங்கர், தாத்தாவுடன் வெளியே சென்றதால் உயிர் பிழைத்தான். கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி