திருமங்கலம்: அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் எம்எல்ஏ

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருமங்கலம் தொகுதி திருமங்கலம் நகர் பகுதியான வாக்குச்சாவடி 57 இல் இருந்து 84 வரை முகமதுசாபுரம் அண்ணாநகர் காட்டு மாரியம்மன் கோவில் பகுதி உள்ளிட்ட 27க்கும் மேற்பட்ட வார்டுகளில் புதிய வாக்குச்சாவடி முகவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 13) சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டம் திருமங்கலம் நகர செயலாளர் ஜே.டி. விஜயன் முன்னிலையில் நடைபெற்றது. 

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது கிளைக் கழக நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து குழு புகைப்படம் எடுக்கப்பட்டது. முன்னதாக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் புளியங்குளம் ராமகிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவர் முருகன், வர்த்தக அணி மாவட்டச் செயலாளர் சதீஷ் சண்முகம், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜஹாங்கீர் மற்றும் திருமங்கலம் நகர நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி