திருமங்கலம்: டூ வீலரிலிருந்து தடுமாறி கீழே விழுந்தவர் பலி

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா காரைக்கேணியைச் சேர்ந்த சிவகுமார் (44) என்பவர் புரோட்டா மாஸ்டராக உள்ளார். இவர் நேற்று (ஜூன் 3) தனது மகனுக்கு ஸ்கூல் பேக் வாங்க இருசக்கர வாகனத்தில் டி.கல்லுப்பட்டிக்குச் சென்றிருந்தார். அவர் அங்கிருந்து கள்ளிக்குடி ரோட்டில் சென்றபோது ரோட்டின் குறுக்கே குழந்தை ஒன்று சென்றதால் நிலைதடுமாறிய சிவகுமார் கீழே விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து கல்லுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி