திருமங்கலம்: அன்னதானத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புங்கங்குளம் கிராமத்தில் புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் கிராம அன்னதானத் திருவிழா இன்று (ஜூன் 1) நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் வழங்கி துவக்கி வைத்தார். இன்று திருமங்கலம் தொகுதி புங்கங்குளம் கிராமத்தில் மாபெரும் கிராம அன்னதான விழா நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசன் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். நிகழ்ச்சியில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி