திருமங்கலம்: இயந்திரத்தில் கை சிக்கியதில் பெண் தொழிலாளி பலி

மதுரை திருமங்கலம் அடுத்த செங்கப்படையைச் சேர்ந்த 58 வயது விவசாயக் கூலித்தொழிலாளி ரேணுகாதேவி, கணேசன் தோட்டத்தில் உளுந்து செடிகளை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தரம் பிரிக்கும் இயந்திரத்தில் அவரது கை சிக்கியது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருமங்கலம் தாலுகா போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி