மதுரை: கிணற்றில் சடலமாக கிடந்த பெண்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மைக்குடி கிராமத்தைச் சேர்ந்த அருணகிரியின் மனைவி தமிழ்ச்செல்வி தம்பதியருக்கு திருமணம் ஆகி நான்கு மாதங்களுக்கு முன் குழந்தை ஒன்று பிறந்தது. (மார்ச் 20) மாலை தமிழ்ச்செல்வி தோட்டத்திற்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் தமிழ்ச்செல்வியைப் பல இடங்களில் தேடினும் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் (மார்ச் 21) காலை தோட்டத்திலுள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என நினைத்து மோட்டாரை இயக்கித் தண்ணீரை வெளியேற்றினர். தண்ணீர் பாதி வெளியேறிய போது கிணற்றினுள் தமிழ்ச்செல்வியின் உடல் இருந்ததைக் கண்டு உறவினர்கள் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் தமிழ்ச்செல்வியின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தமிழ்ச்செல்வி கிணற்றுக்குள் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என திருமங்கலம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி