திருமங்கலம்: பேருந்து கவிழ்ந்து 29 பேர் காயம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்திலிருந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு கூடக்கோவில், கீழ உப்பிலிகுண்டு வழியாக நேற்று (டிச. 22) மதியம் நகர பேருந்து புறப்பட்டு சென்றது. பேருந்தை ஓட்டுநர் லிங்கம் (52) என்பவர் ஓட்டிச் சென்றார். சவுடார்பட்டி சேர்ந்த நடத்துநர் பாண்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்தனர். கூடக்கோவிலை கடந்து கொக்குளம் சாலை முனியாண்டி கோயில் அருகே பேருந்து சென்றபோது ஸ்டீயரிங் ராட் உடைந்ததால் பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். 

இதையடுத்து 5 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து வயல்வெளியில் விழுந்தது. இதில் 29 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் விருதுநகர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி