அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவம்; மக்கள் அச்சம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தின் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் (செப்.,29) இரவு அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சின்ன செங்குளத்தில் தனியார் நிறுவன ஊழியராக திருப்பதி (53) என்பவர் பணியாற்றி வருகிறார்.இவர் நேற்று முன்தினம் (செப்.,29) இரவு ஆறு கண் பாலம் அருகே குளித்துவிட்டு விருதுநகர் ரோட்டில் நடந்து வந்த போது. அவரை வழிமறித்த ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ஒரு பவுன் தங்க செயினை பறித்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

அதே போல திருமங்கலம் அருகே குராயூரை சேர்ந்த சங்கிலி (30) என்பவர் நேற்று முன்தினம் (செப்.,29) இரவு மதுரையில் இருந்து கள்ளிக்குடி வந்த போது, கள்ளிக்குடியில் இருந்து குராயூருக்கு நடந்து சென்றார். அப்போது ஓடைப்பட்டி அருகே வழிமறித்த ஒருவர் கத்தியை காட் ஒன்றரை பவுன் செயினை பறித்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கள்ளிக்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி