மதுரை சொக்கிகுளம் அண்ணாநகரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி குருவன் (53), சிம்மக்கல் பகுதியில் ஒரு வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, மூன்றாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திலகா்திடல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.