மதுரையில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், கப்பலூரில் 2.5 ஏக்கரில் 140 அடி உயர வ.உ.சி. சிலை அமையவுள்ளது. இதற்காக தனியார் கல்லூரி இடம் கொடுத்துள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி இந்திய துணை குடியரசுத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் சிலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். சிலை அமைவிடத்தில் நூலகம், பூங்கா, 2 லிப்ட் அமைக்கப்படும். 15 மாதத்தில் சிலை அமைக்கப்பட்டு பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக 10 கோடி ரூபாய் செலவாகும் என அவர் தெரிவித்தார்.