இன்று (ஜூன் 12) மதியம் நடந்த அகமதாபாத் விமான விபத்து குறித்து மதுரை எம்.பி. வேதனையை தெரிவித்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. விமானம் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் மோதியதெனும் செய்தி மேலும் பதைபதைக்க வைக்கிறது. மீட்புப் பணிகள் விரைந்து நடைபெறும் நிலையில், விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனைவரின் குடும்பத்தினரின் கரம் பற்றிக் கொள்கிறேன். 'தேசம் பதறும் துயரம்' என குறிப்பிட்டுள்ளார்.