மதுரை: நாய் மீது டூவீலர் மோதியதில் ஆசிரியர் பலி

சிவகங்கை மாவட்டம் ஏனாதியைச் சேர்ந்த 42 வயது ஆசிரியர் ராமமூர்த்தி, சக ஆசிரியரின் தாயார் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது, தும்மக்குண்டு கரிசல்பட்டி விலக்கு அருகே நாயின் மீது மோதி காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (நவ. 6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி