சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 'சேயோன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை நேற்று (மே 18) நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், விஜய் சார் தேர்தலில் வெற்றி பெற்றதும் அவரை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன். அப்போதும் கூட அமைதியாக இருந்து என வாழ்த்தை பெற்று கொண்டார். அவர் எது எடுத்தாலும் சிறப்பாக செய்பவர். அதுபோல் இதையும் சிறப்பாக செய்வார் என நம்புகிறேன். மதுரைக்கு ஒரு பவர் இருக்கு. அந்த பவர் குறையாம ’சேயோன்’ இருக்கும் என்று கூறினார்.