மதுரை: நெல் கொள்முதலில் முறைகேடு; ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில், நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூடைக்கு 60 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். இதற்கு பதிலளித்த ஆட்சியர் பிரவீன்குமார், முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும். நெல் கொள்முதல் நிலுவைத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனிடையே, நெல் கொள்முதல் பணத்தை வழங்கக் கோரி பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி