மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களுக்கு வழங்கும் நிதியை திமுக அரசு தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, மதுரை திருவள்ளுவர் சிலை அருகே பாஜக பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியல் அணி தலைவர் அலெக்ஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துமாரி, திருப்பதி ஆகியோர் முன்னில வகித்தனர். அப்போது திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.