இந்நிலையில், இட பிரச்சினை தொடர்பாக வி.ஏ.ஓ., முத்துப்பாண்டியை சம்ரத்பீவி சந்தித்தபோது, வாய்வாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலறிந்த சம்ரத்பீவி மகன்கள், நேற்றுமுன்தினம் (மார்ச். 12) இரவு முத்துப்பாண்டி வீட்டிற்குச் சென்று பின்புறக் கதவை உடைத்து உள்ளே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, முத்துப்பாண்டி தலை மீது அம்மிக்கல்லை, ரபிக் முகமது போட்டுள்ளார். அங்கிருந்த வி.ஏ.ஓ., மனைவியின் அலறலைக் கேட்டு அருகில் வசித்தவர்கள், சகோதரர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தற்போது வி.ஏ.ஓ மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு