திருமங்கலம்: சாலை விபத்தில் சலவை தொழிலாளி பலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுஷா புரத்தை சேர்ந்த முத்துராஜா (43) என்பவர் சலவை தொழில் செய்து வந்தார். தனது மனைவி கனகவல்லியுடன் இருசக்கர வாகனத்தில் சாப்டூர் அருகே வண்டாரியில் உறவினர் வீட்டு நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மங்கள்ரேவ்-சேடப்பட்டி சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முத்துராஜா தலையில் பலத்த காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சேடப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி