மதுரை மாவட்டம், டி. கல்லுப்பட்டி அருகே வன்னிவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் (39) என்பவர், நேற்று (மே. 5) இரவு வேலை முடிந்து வீடு திரும்பும்போது, நடுவகோட்டை அருகே சாலை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நள்ளிரவில் நடந்த இந்த விபத்து குறித்து இன்று (மே. 6) அதிகாலை அப்பகுதி மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சந்திரன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.