மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் (40) என்பவர் செவ்வாய்க்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது, குறுக்கே வந்த நாய் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.