மதுரை: கஞ்சா வைத்திருந்த பையை போட்டுவிட்டு ஓடிய முதியவர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீசார் பிப். 17 இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, எலியார்பத்தியில் உள்ள நர்சிங் கல்லூரி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் முதியவர் ஒருவர் கையில் இருந்த பையை விட்டுவிட்டு முட்புதருக்குள் ஓடினார். போலீசார் நடத்திய சோதனையில், அந்தப் பையில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. தப்பியோடிய அடையாளம் தெரியாத முதியவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி