மதுரை: ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

மதுரை அருகே திருப்பரங்குன்றம் - திருமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர், ரயில் வருவதை கவனிக்காமல் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மதுரை நிலையூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் என்று விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி