மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ். கோவில்புரம் கிராமத்தைச் சேர்ந்த அஸ்தக் மற்றும் சவுமினி தம்பதியினரின் 7 மாத ஆண் குழந்தை, குடும்பத்துடன் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே குலதெய்வக் கோவிலுக்குச் சென்றுவிட்டு கோவை திரும்பும் வழியில், திருமங்கலம் அருகே டி. புதுப்பட்டி பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.