மதுரை: நீதி கிடைக்காததால் தற்கொலை மிரட்டல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொங்கப்பட்டி கிராமத்தில் காசிமாயன்-பழனியம்மாள் தம்பதியினரின் பூர்வீக சொத்தை, பழனியம்மாளின் சகோதரி குடும்பத்தினர் கடந்த 15 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், ஆக்கிரமிப்பாளர்கள் காவல்துறையில் பணிபுரிவதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட தம்பதியினர் குற்றம் சாட்டுகின்றனர். தங்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், நீதி கிடைக்காத பட்சத்தில் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி