மதுரையில் பள்ளி ஆசிரியை கோர சாவு

மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி அம்பிகா (45) என்பவர் மகாத்மா பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை (ஜூலை 30) வழக்கம்போல் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். கருப்பாயூரணி பி.எஸ்.எம்.பி மகால் அருகே சென்றுபோது, அவர் வந்த இருசக்கர வாகனத்தின்மீது டிப்பர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் பள்ளி ஆசிரியை அம்பிகா சம்பவ இடத்திலேயே ஹெல்மெட் அணிந்திருந்தும் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கருப்பாயூரணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி