மேலூர் அருகே வடமாடு மஞ்சு விரட்டு

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், மத்தம் மேலநாடு கல்லம்பட்டி புதூர் வடக்கு தெரு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் சார்பிலும் மற்றும் இளைஞர்கள் சார்பிலும் நடத்தப்பட்ட முதலாம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி கோகுல் நகர் அருகே உள்ள மாயன்குளம் கண்மாயில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 15 அணியை சேர்ந்த மாடுபிடி அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 15 காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசு தொகையும், வெள்ளிகாசு, அண்டா, குத்து விளக்கு, தென்னங்கன்று போன்ற பரிசுகளை விழா குழுவினர் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி