மதுரை மாவட்ட மேலூர் போலீசார் வெள்ளரிப்பட்டி டோல்கேட் பகுதியில் நேற்று முன்தினம் (பிப்.23) ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு கஞ்சா விற்ற தெற்கு தெரு உதய குமார் (21) இளஞ்சிப்பட்டி விக்ரம் (21), மற்றும் புது தாமரைப்பட்டி சரவணனை (21) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.