மதுரை திருவாதவூர் அருகே, ஆக்டிங் டிரைவர் ராஜ்குமார் (33) கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சகோதரர்கள் அருள் (25), அருண் (20) மற்றும் நண்பர் நவநீதன் (20) ஆகிய மூவரை போலீசார் மே 28 அன்று கைது செய்தனர். விசாரணையில், நால்வரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது, ராஜ்குமார் சகோதரர்களின் தாயை தவறாகப் பேசியதால் ஏற்பட்ட தகராறில், மூவரும் சேர்ந்து ராஜ்குமாரை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது.