மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மேலூர் அருகே கருங்காலக்குடி கிராமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் புதிய டீ கடை தொடங்க ரூ.20,000 கடன் உதவிக்கான காசோலையை பயனாளருக்கு வழங்கினார். மேலும், பேச்சியம்மன் மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த மகேஷ்வரிக்கு எம்பிராய்டரி தொழிலுக்காக வழங்கப்பட்ட ரூ.50,000 கடனுதவி குறித்தும் ஆய்வு செய்து, மாத வருமானம் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்வு நேற்று (21.05.2026) நடைபெற்றது.