அழகர் கோவிலில் வசந்த உற்சவம்.

மதுரை அருகே உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயிலில் பசலி ஆண்டு 1435-க்கான வசந்த உற்சவம் மே 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி மே 31 ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறவுள்ளது. மே 22 ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் வசந்த உற்சவம் தொடங்குகிறது. தினமும் மாலை 5.00 மணிக்கு சுவாமி ஆஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, ஆடி வீதி வழியே உலா வந்து, இராமர் சன்னதி வழியே பதினெட்டாம்படி சென்று வசந்த மண்டபம் வந்தடைவார்.

தொடர்புடைய செய்தி