மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்தல் நிகழ்வு

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சட்டமன்ற அறிவிப்பு 2025-26 இன் படி, மூத்த தம்பதியருக்கு சிறப்பு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப். 10) நடைபெற்றது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட 31 ஜோடிகளுக்கு மணமாலை, பழ வகைகள், திருமண பட்டு, வேஷ்டிகள் அடங்கிய தாம்பூல தொகுப்பு வழங்கப்பட்டது. முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க நூபுர கங்கை தீர்த்த அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி