மதுரை மாவட்டம் மேலூரில், ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டித்தரக் கோரி, வழக்கறிஞர் சங்கம் சார்பில் வரும் பிப்ரவரி 26, வியாழக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தப் போராட்டத்திற்கு பொதுமக்கள், வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.