மதுரை மாவட்டம் மேலூர் தலைமை தபால் நிலையம் முன்பாக இன்று (பிப். 12) அனைத்து கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சிஐடியு தாலுகா செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் அனைத்து கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.