கோவில் மணிகள் திருட்டு: போலீஸ் வலை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோயில் மணிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே கோவில்பட்டி, சின்னகற்பூரம்பட்டி, பெரிய கற்பூரம்பட்டி ஆகிய மூன்று கிராம மக்களும் வழிபடக்கூடிய கிராம தெய்வமான திறனி கருப்புசாமி கோயில் கோவில்பட்டிக்கு மேற்கு பகுதியில் உள்ளது. இந்த கோயிலில் வெங்கல மணிகள் வரிசையாக கட்டப்பட்டு இருக்கும். இதிலிருந்து 50க்கும் மேற்பட்ட கோயில் மணிகள் கட்டியிருந்த நிலையில் இரும்பு கம்பியை ரம்பத்தால் அறுத்து மர்ம நபர்கள் நேற்று (செப். 24) திருடிச் சென்றுள்ளனர்‌

இதுகுறித்து கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் மணிகளை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி