குவாரி நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

மதுரை அருகே உள்ள சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் 46 வயதுடைய நபர் இவர் தனியார் நிறுவனத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று மோதிலால் யா. ஒத்தக்கடை பகுதியில் உள்ள நரசிங்கம் குவாரியில் உள்ள தண்ணீரில் கால் கழுவ சென்றார். தண்ணீரில் இறங்கிய போது அவர் நிலைத் தடுமாறி குவாரியில் விழுந் தார். நீரில் மூழ்கி உயிரிழந்தார். குவாரியில் உடல் மிதந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறை யினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். உடனடியாக, தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். இதுகுறித்து யா. ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி