மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே நரசிங்கமம் குவாரி பகுதியில் 39 வயதுடைய ஆண் நபர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகவும் சம்பவத்தன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.