மதுரை அருகே அழகர் கோவில் மாத்தூர் பில்லுசேரியைச் சேர்ந்த ஸ்ரீ ரங்கம்மாள் (42) என்பவர், தன் மகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, புளியங்குளம் தங்கையா மகன் பாலசுப்பிரமணி ஓட்டி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து டூ வீலரில் மோதியது. இதில் ஸ்ரீரங்கம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் காயமடைந்தார். இது குறித்து அப்பன் திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.