மதுரைக்கு மெட்ரோ ரயில்.. வெளியான விளக்கம்

மதுரை மற்றும் கோவைக்கு மத்திய அரசு மெட்ரோ ரயில் சேவையை நிராகரித்ததாக வெளியான தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மறுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை, மதுரை புதிய மெட்ரோ ரயில் சேவைக்கான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை. திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அளித்துள்ளது. கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் திட்ட அறிக்கையை அனுப்புமாறு தமிழக அரசிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி