மேலூா்: சரக்கு வாகனம் மோதி இளைஞர் பலி

திங்கள்கிழமை மாலை மேலூரிலிருந்து உறங்கான்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அன்புச்செல்வன் (19) மற்றும் ரஞ்சித் மீது, பெரியகுளத்து கண்மாய்க் கரை அருகே பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்புச்செல்வன் மேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது நண்பர் ரஞ்சித் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கீழவளவு போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி