மேலூர்: இளம் பெண் மாயம்.. தாயார் புகார்

மதுரை மாவட்டம் மேலூர் கீழையூர் அருகே உள்ள பட்டி அடைக்கன்பட்டியில் வசிக்கும் தவமணியின் மகள் மோகனா ஸ்ரீ (20) என்பவர் கடந்த 14ஆம் தேதி மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்கள் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (மார்ச். 15) மாலை இவரது தாயார் மலர்கொடி கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி