மதுரை அழகர் கோயிலில் இரணியன் கோட்டைச்சுவரை கடந்து கோயில் வளாகத்திற்குள் வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நவம்பர் 19 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இந்த கோயிலில், வாகனங்களால் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.