இது போல மேலவளவு வி.ஏ.ஓ., எழில் வேந்தன் அழகாபுரி கண்மாய் பகுதியில் ரோந்து சென்ற போது டிராக்டரில் ஆற்று மண்ணை அள்ளிக் கொண்டிருந்த வி.எஸ்., நகரைச் சேர்ந்த விஜயகுமார் (28) என்பவரைக் குறித்து மேலவளவு காவல் நிலைய போலீசாருக்கு விஏஓ தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் விஜயகுமாரை கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.